– வைரலாகும் பெட்ரோல் பில்
விலையை குறைக்க இதை செய்யுங்கள் எனும் வாசகம் அடங்கிய பெட்ரோல் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.