–நாளை திறக்கப்படுகிறது
இந்த பனிப்பாறை உடைந்ததால் ரிஷிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பல பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டு 13 கிராமங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த கிராமங்களை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கில் மாற்று பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 25-ஆம்தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகளை வருகிற 20-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தார் இரவு-பகலாக அயராது பணி செய்து இந்த பாலப்பணிகளை முடித்து விட்டனர். எனவே சோதனை அனைத்தையும் முடித்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்த பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது. அடித்துச்செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக புதிய பாலத்தை வெகுவிரைவில் கட்டி திறக்கப்படுவது சமோலி மாவட்டத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.