மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை

 –மம்மிகளை  பதப்படுத்தும் ரகசியம் அவிழ்ந்தது.

பண்டைய எகிப்தியர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு தயாரிக்க பயன்படும் எம்பாமிங் செயல்முறையின் முக்கியமான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மம்மிபிகேஷன் (mummification) குறித்த மிகப் பழமையான கையேடு சமீபத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான மருத்துவ பாப்பிரஸில் (papyrus) கண்டுபிடிக்கப்பட்ட கையேட்டை அடிப்படையாகக் கொண்டது.

பண்டைய எகிப்தில், எம்பாமிங் ஒரு புனிதமான கலையாகக் கருதப்பட்டது, மேலும் இந்த செயல்முறையைப் பற்றிய அறிவு மிகக் குறைந்த நபர்களுக்கே தெரியும்.

சடலத்தை பதப்படுத்தும் கலையின் பெரும்பாலான ரகசியங்கள் ஒரு எம்பாமரில் இருந்து மற்றொருவருக்கு வாய்வழியாக கற்பிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.எழுத்துபூர்வமான சான்றுகள் மிகவும் குறைவு. இதுவரை வரை, மம்மிபிகேஷன் எனப்படும், சடலத்த்டை பதப்படுத்துவது குறித்த இரண்டு நூல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது மருத்துவ ஏடு ஒன்றில் எம்பாமிங் குறித்த ஒரு சிறிய குறிப்பேடு கிடைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மூலிகை மருத்துவம், சருமம் ஊதிப்போவது தொடர்புடையது.

எம்பாமிங் செயல்முறையை மறுகட்டமைப்பதில் பாப்பிரஸ் லூவ்ரே-கார்ல்ஸ்பெர்க் (Louvre-Carlsberg) என்பவரின் கையேடு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செயல்முறையின் விவரக்குறிப்பு நான்கு இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, எம்பாமர்கள் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒருமுறை மம்மியில் தீவிரமாக வேலை செய்வார்கள்.

ஆய்வின் முதன்மை எழுத்தாளர் சோஃபி ஷிய்டின் கூற்றுப்படி, ”மம்மியின் ஒரு சடங்கு ஊர்வலம் குறிக்கப்பட்டது, இறந்தவரின் உடல் எம்பாமிங் காலத்தில் 17 முறை பயணிக்கிறது. அவை நான்கு நாட்களில் நடைபெறும். சடலம் துணியால் மூடப்பட்டிருக்கும்.பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக நறுமணப் பொருள்களால் நிரப்பப்பட்ட வைக்கோலால் சடலம் மூடப்பட்டிருக்கும்”

பாப்பிரஸின் இரண்டு பகுதிகள் முதலில் இரண்டு தனியார் சேகரிப்பாளர்களுக்கு சொந்தமானது, மேலும் அதன் பல பிரிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. பலியோகிராஃபி எனப்படும் அடையாள வடிவங்கள் கண்டறிப்பட்டது. கிமு 1450 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட ஆறு மீட்டர் நீளமுள்ள பாப்பிரஸ் கண்டறியப்பட்டது.

பண்டைய எகிப்திலிருந்து எஞ்சியிருக்கும் இரண்டாவது மிக நீண்ட மருத்துவ பாப்பிரஸ் இது. இதன் பெரும்பகுதி, மூலிகை மருந்து , தோல் நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது.

குறிப்பாக, இது ஒரு தெய்வீக மூலிகையின் தோற்றம், வாழ்விடம், பயன்பாடுகள் மற்றும் மத முக்கியத்துவம் மற்றும் அதன் விதை மற்றும் சருமத்தின் ஊதிப்போகும் தன்மை பற்றிய ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here