–இதுவரை ரூ.2,500 கோடி நன்கொடை வசூல்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5- ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நன்கொடை திரட்டும் பணி கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், “உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ஏராளமான பக்தர்கள், பல்வேறு மதத்தினர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பிப்ரவரி 4- ஆம் தேதி வரை 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் 2500 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது. கடந்த 45 நாட்களில் நடந்த இந்த நிதி வசூல் போதுமான அளவு இருப்பதால் நன்கொடை வசூல் இயக்கம் நிறைவடைந்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது.
அதேசமயம் இனிமேல் நன்கொடை அனுப்ப விரும்புவர்கள் தீர்த்த ஷேத்திர அறக்கட்டகளையின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.