ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மறக்கப்படவும் கூடாது; மறைக்கப்படவும் கூடாது. எதிர்பார்ப்பைத் தந்துவிட்டு காக்க வைப்பதும் ஒரு வகையில் பாவம் தான்.
இயலாதவர்களின் வாழ்வாதாரம் அடுத்தவர் உதவியைச் ங்ார்ந்துதான் இருக்கிறது. அதுவும் இந்தக் கோவிட்-19 உயிர்க்கொல்லி தொற்று பரவல் ஏற்படுத்தியிருக்கும் அலங்கோலம் கொஞ்ங் நஞ்சமல்ல.
நாட்டு வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் இயல்பு வாழ்க்கை முறையை முற்றாகப் புரட்டிப் போட்டுவிட்டது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மக்களை வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டது.
பணக்காரன் முதல் வறியோர் வரை அதன் தாக்கத்தால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன ஙெ்ய்வது என்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனால், ஈரம் நிறைந்த நல்லோர்களால் எவருமே பட்டினிக்கிடக்கவில்லை.
மலேசியா ஒரு சொர்க்கபூமி என்பது இந்தக் கோவிட்-19 காலகட்டத்தில் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. உணவு, உதவிகள் என ஏழை மக்களை இன்றளவும் சென்றடைந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈரமுள்ள இதயங்கள் உள்ளவரை இங்கு எவர் வயிறும் காய்ந்து போகாது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூரில் வாழும் பி40 பிரிவைச் ஙே்ர்ந்த குடியிருப்பாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் 5,750 பைகள் இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஒரு மாதம் கடந்துவிட்டது. இலவச அரிசிப்பைகள் என்னவாயின என்பதற்கு எவ்வித பதிலும் இல்லை. அந்த இலவச அரிசி விநியோகம் செய்யப்பட்டுவிட்டதா என்ற தகவலும் இல்லை.
இதனைப் பெறுவது எப்படி? எங்கு – யாரிடம் தொடர்புகொள்வது என்பது தெரியாமல் ஏழைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
குறைந்தபட்சம் கூட்டரசுப் பிரதேச அமைச்சு இதற்கு விளக்கம் தந்தால் அந்த ஏழை மக்களுக்கு கொஞ்சம் பாரம் குறையும்.
இந்த இலவச அரிசிப் பைகளை விநியோகம் செய்யும் பொறுப்பைக் கூட்டரசுப் பிரதேச அமைச்சே நேரடியாக ஏற்றுள்ளதா அல்லது அரசியல் நியமனங்களில் இடம்பெற்றிருப்போரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா?
ஒரு வெளிப்படைத் தன்மையுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால் ஏழைகளின் பசி போக்கப்படும் என்பது உறுதிசெய்யப்படும்.
அதே சமயத்தில் 100 ரிங்கிட் மதிப்புள்ள உணவுக் கூடைகள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதற்கு 5 கோடி ரிங்கிட் ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது.
இப்பொறுப்பு சமூகநல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டிருகிறது. இத்திட்டமும் என்னவானது என்று இன்றளவும் தெரியவில்லை. எல்லாமே ஒரே மூடுமந்திரமாகத்தான் இருக்கிறது.
மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்த உணவுப் பொருட்கள் இன்னமும் ஏழை மக்களைச் சென்றடையாமல் இருப்பதற்கு என்னதான் காரணம்?
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா பிந்தி முகமட் ஹருண்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களைக் கடந்துவிட்ட போதிலும் திட்டமிட்டபடி இந்த உணவுக் கூடைகள் ஏழை மக்களைச் சென்றடையாமல் இருப்பது மிகப்பெரிய வருத்தம்!
ஒப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் ஏதோ கொடுத்தோம் என்ற அலட்சியம் தலையெடுக்காமல் தரமான பொருட்கள் தரப்பட வேண்டியதை உறுதிசெய்யும் பொறுப்பும் தமக்கு உள்ளது என்பதை அமைச்ங்ர் மறந்துவிடக்கூடாது.
ஏழைகளின் சிரிப்பில்தான் இறைவன் வாழ்கிறான்!