சன்பெங் தமிழ்ப்பள்ளியில் மின்னியல் உலகம்

கணினி வகுப்பறையால் மாணவர்கள் நன்மை 

கோலாலம்பூர்-

தலைநகர் சன்பெங் தமிழ்ப்பள்ளியில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மின்னியல் உலகம் எனும் கணினி அறையில் தற்போது மாணவர்கள் கணினி மூலம் கல்வி கற்று வருவதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் இ. மார்கரெட், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் எண்ட்ரூ டேவிட் கூறினர்.

பள்ளியில் ஒரு கணினி வகுப்பு வேண்டும் என்று ஆரம்பத்தில் சிந்தனை எழுந்தபோது, அதனை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

அதற்கேற்ப பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் – ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்த மின்னியல் உலகத்தை உருவாக்கினோம்.

இந்த மின்னியல் உலகத்தில் கணினிகள் இடம்பெற வேண்டும் எனும் நோக்கில் அதற்கேற்ற வடிவமைப்பையும் தொழிலதிபர் டேவிட் ராஜுவால் வடிவமைக்கப்பட்டு இந்தக் கணினி உலகம் இப்போது மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மின்னியல் உலகம் அதன் பெயருக்கேற்ப இருக்க வேண்டும் எனும் நோக்கில் மாணவர்களைத் தயார்ப்படுத்தி அவர்களை சிறந்த தொழில்நுட்பவாதிகளாக உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் சிந்தனையோடு செயல்பட்டோம்.

அந்த வகுப்பறையில் கணினி தேவைப்படும் எனும் நோக்கில் பல நல்லுள்ளங்களை நாங்கள் அணுகி கணினிகளைப் பெற்றோம்.

அதே வேளையில் மின்னியல் உலகத்தைத் திறந்து வைக்க வேண்டும் எனும் நோக்கில் மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணனை அழைத்தோம்.

அழைத்தது மட்டுமல்ல அவர் வருகை தந்து கணினிகளைப் பெற்றுத் தர அவர் செய்த முயற்சிகளை சன்பெங் தமிழ்ப்பள்ளி நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது.

அது மட்டுமல்லாது மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி. மோகன், மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோகப்பொருள் மறுசுழற்சி சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி, டத்தோ ஏ. பத்துமலை, டத்தோ ரசுல் அப்துல் ரசாக், தேசிய நில நிதி கூட்டுறவு ங்ங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன், டத்தோ என். சுரேஷ்குமார், டத்தோ சிவசுந்தரம், டாக்டர் சந்திரஙே்கர், எஸ். நரேந்திரன், டத்தோ டாக்டர் நோய்ல் ரோபர்ட், கே.வி. அன்பா, அருணாசலம் (புரூணை), கணேஷ் பன்னீர், பி. தேவராஜ், ஏ.எஸ். பெருமாள், மோகன் சுப்பிரமணியம், சந்திரஙே்கரன், மகேந்திரன், தினாளன் டத்தோ டி. ராஜகோபாலு உள்ளிட்டோருடன் மூடாஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் ,  மார்கோ நிறுவனங்களும் சன்பெங் தமிழ்ப்பள்ளியின் மின்னியல் உலகத்திற்கு வழங்கிய ஆதரவு மகத்தானவையாகும்.

மாணவர்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பை  சன்பெங் தமிழ்ப்பள்ளி நன்றியுடன் நினைவுகூர்கிறது.

இந்த மின்னியல் உலகம் பல ஆயிரக்கணக்கான வெள்ளிச் செலவில் அமைக்கப்பட்டிருப்பது மாணவர்களின் நலனுக்காகவே என்பதைத் தற்போது தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மின்னியல் உலகத்தால் மாணவர்கள் பலர் நன்மை பெற்று எதிர்காலத்தில் கணினி வழி உலகப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று தலைமையாசிரியர் மார்கரெட்டும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் எண்ட்ரூவும் தெரிவித்தனர்.

கு. தேவேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here