-ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
பிரான்ஸ் நாட்டு தொழிலதிபரான செர்கே டசால்ட் என்பவரின் மூத்த மகனான ஆலிவர் டசால்ட் செர்கே, ரபேல் போர் விமானங்களை கட்டும் தொழிலை செய்து வந்தார்.
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஆலிவர் டசால்ட் (69). நாட்டின் பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஆலிவர் டசால்ட் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் பாரீஸ் நகரருகே பியூவாயிஸ் என்ற பகுதியில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் , அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரார்டு டார்மனின் ஆகியோருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் டசால்ட் காணப்பட்டார்.
டசால்ட் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். அதில், நம்முடைய நாட்டிற்கு சேவையாற்றும் பணியை டசால்ட் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது. அவரது திடீர் மரணம் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.