அப்துல் கலாமின் மூத்த சகோதரர் உடல் நலலடக்கம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர்முகம்மது முத்து மீரா மரைக்காயரின் உடல், ராமேசுவரத்தில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ஏபிஜெ. அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர்(103). இவர் ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் பூர்வீக வீட்டில் மகள், மகனுடன் வசித்து வந்தார். இவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் காலமானார்.

முகம்மது முத்து மீரா மரைக்காயரின் உடல் நேற்று காலை 11 மணியளவில் ராமேசுவரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில்அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். கலாம் இருக்கும்போது தனது மூத்தசகோதரரைச் சந்திக்க ராமேசுவரத்துக்கு அடிக்கடி வந்து செல்வார். தனது அண்ணன் மீது கலாம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

கலாமின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமேசுவரம் வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முகம்மது முத்து மீரா மரைக்காயரை மறக்காமல் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here