இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கிறதா சீனா?

பாராசிட்டமால், ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின்        மூலப்பொருள் விலை 100% அதிகரிப்பு

அத்தியாவசிய மருந்துகளான பாராசிட்டமால், ஆன்ட்டிபயாடிக் மருந்து மாத்திரைகளைத் தயாரிப்பதற்கான இடுபொருள் அல்லது மூலப்பொருட்களின் விலைகளை கண்டபடி அதிகரித்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முயன்றுள்ளது.
சீனா.

ஏபிஐ, அதாவது ஆக்டிவ் பார்மசியூட்டிகல் இன்கிரெடியண்ட்ஸ் என்று அழைக்கப்படும் அல்லது பல்க் டிரக்ஸ் என்று இது அழைக்கப்படும். இதன் விலைகள் நவம்பர் மாதம் முதல் இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலிலும் இதே ட்ரெண்ட் இருந்தது. ஏனெனில் அப்போது கொரோனா அச்சுறுத்தலால் சீன வர்த்தகம் முடங்கியது.

இப்போது பிரதமர் மோடி தற்சார்பு இந்தியாவை முன்னெடுத்து வரும் நிலையில் மருந்து உற்பத்திப் பொருட்களின் உற்பத்தியையும் தயாரிக்க இந்தியா முயற்சி எடுக்கலாம் என்று தெரிகிறது, பல்க் ட்ரக்ஸ் ஏற்றுமதியில் சீனா உலகிலேயே நம்பர் 1. ஆனால் இப்போது விலையை ஏற்றி தங்கள் நாட்டை பழிதீர்க்க நினைக்கும் இந்தியா உள்ளிட்ட கூட்டணி நாடுகளுக்கு 100% விலையை ஏற்றி பதிலடி கொடுத்துள்ளது. நவம்பர் மாதம் முதல் சாதாரணமாக ஜுரம், தலைவலி, உடல் வலிக்கு எடுத்துக் கொள்ளும் தினசரிப் பயன்பாட்டு பாராசிட்டமால் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களின் விலையை நவம்பர் முதல் சீனா 100% அதிகரித்துள்ளது. கிலோ ஒன்று ரூ.320 என்று இருந்தது இப்போது கிலோவுக்கு 650 ஆகியுள்ளது. இப்படியானால் மருந்து விலை ஏறாமல் என்ன செய்யும்? என்கின்றனர் இந்தத் தொழிற்துறை அனுபவசாலிகள்.

பாராசிட்டமால் தயாரிக்க பயன்படும் பாரா அமினோ பினால் கிலோவுக்கு 3.2 டாலரிலிருந்து 3.5 டாலராக இருந்தது தற்போது கிலோவுக்கு 7.3-7.5 டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே போல் வலி மற்றும் அழற்சியைக் குணமாக்கும் ஒரு மருந்துக்குத் தேவையான மூலப்பொருள் விலை கிலோ ரூ.1,700லிருந்து ரூ.5,500 ஆக அதிகரித்துள்ளது. 223% அதிகரிப்பு!!

அதே போல் ஆண்ட்டிபயாடிக் ஆர்னிடாசோல் உட்பொருள் கடந்த 4 மாதங்களில் 44% அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.970லிருந்து ரூ. 1400 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் மருந்து, மாத்திரை உற்பத்திக்கான மூலப்பொருட்களை 70% சீனாவிடமிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. சீனாவிடமிருந்து 2018-19- இல் இந்தியா 2.4 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு இறக்குமதி செய்துள்ளனர்.

மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள் உற்பத்தியில் தற்சார்பு எய்த பிரதமர் நரேந்திர மோடி அரசு, லாபத்துடன் தொடர்புடைய ஊக்கம் என்ற திட்டத்தை எதிர்த்து சீனா தன் மூலப்பொருள் கட்டணங்களை ஏற்றியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here