ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்

-திருத்தப்பட்டு வெளியானது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையால் நேற்று வெளியிடப்பட்டது.இந்த புதிய தீர்மானத்தில் கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான ஆட்சேபனை பிரிவை நீக்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக மத சுதந்திரம் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றின் தாக்கங்கள் திருத்தப்பட்ட தீர்மானத்தின் மேலதிக விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.’நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் குறித்த தீர்மானம் கனடா, ஜெர்மனி, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து இன, மதக் குழுக்களின் உரிமைகளையும் மதித்து, நிலையான அமைதி, மேம்பாட்டுக்கான அரசியல் தீர்வை அடைவதற்கான ஒரு பரந்த நோக்கத்துடன் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறு மதிப்பீடு செய்ய ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்மானம் கூறியுள்ளது.சர்வதேச மனித உரிமைகளுக்கும் அதை மீட்டெடுக்கும் வேறு எந்த சட்ட செயல்முறைக்கும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here