60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும்

-மோடி அரசின் திட்டம்

PM Shram Yogi Mandhan Yojana: ஏழை , முதியவர்களின் நலனை மனதில் கொண்டு மோடி அரசு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு மாதத்திற்கு ரூ .3000 வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. இதற்காக இதுவரை சுமார் 45 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏழை , முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ .3000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனாவை மத்திய அரசு 2019 இல் அரசு துவக்கியது.

இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 4, 2021 க்குள் சுமார் 44.90 லட்சம் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் 18-40 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களது மாத வருமானம் ரூ .15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

PM-SYM திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு ரூ .55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில், 18 வயதுடையவர்கள் மாதத்திற்கு ரூ .55 செலுத்த வேண்டும், 30 வயதில் உள்ளவர்கள் ரூ .100 செலுத்த வேண்டும், 40 வயது நிரம்பியவர்கள் மாதத்திற்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஒரு தொழிலாளி தனது 18 வயதில் PM-SYM திட்டத்தில் தன்னை பதிவு செய்திருந்தால், அவர் ஒரு வருடத்தில் 660 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும். அந்த தொழிலாளி 60 வயதுக்குள் ரூ .27,720 முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தொழிலாளர்கள் 42 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 60 வயதானவுடன் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ .3,000 கிடைக்கும்.

இந்திய அரசின் இத்திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. ஆகையால் LIC ஓய்வூதியத்தையும் அளிக்கும்.

இந்த வழியில் பதிவு செய்யலாம்

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய, தொழிலாளர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பொது சேவை மையத்திற்கு (CSC Center) சென்று தங்கள் கணக்கைத் திறக்க வேண்டும். கணக்கைத் திறந்த பிறகு, தொழிலாளிக்கு ஷ்ரம் யோகி அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற 1800-267-6888 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here