-ஆரிஸ் கானுக்கு மரண தண்டனை
பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 10 லட்சம் ரூபாயை, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸ் வளாகத்தில், 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் சர்மா ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். ஆரிஸ் கான் என்ற பயங்கரவாதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஆரிஸ் கானை குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, ஆரிஸ் கானுக்கு மரண தண்டனையும், 11 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார். இது அரிதினும் அரிதான வழக்கு என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.