நடுவானில் விமானத்தில் பிறந்த பெண் குழந்தை

 -கடவுளாய் வந்து உதவிய மருத்துவர்

ஜெய்ப்பூர்:

பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்த ஒரு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண்மணி ஒருவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதே விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த டாக்டர். சுபானா நாசிர் இண்டிகோ குழுவினரின் உதவியுடன் அவர் குழந்தையைp பிரசவித்தார்.

விமானம் ஜெய்ப்பூரை அடைந்தவுடன் போதிய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட, மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை தயாராக வைக்குமாறு ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளனர்.

இந்த செய்தி விமான நிறுவனத்தால்உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில், “பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு இண்டிகோ விமானத்தில் ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த ஒரு மருத்துவர், விமானக் குழுவினரின் உதவியுடன் குழந்தை பிரசவிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உடனடியாக ஒரு மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடு வானில் விமானத்தில் குழந்தையை பிரசவிக்க உதவிய டாக்டர். நாசிருக்கு விமானம் தரை இறங்கியவுடன் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘அரைவல்’ ஹாலில் அவரை வரவேற்ற விமான நிறுவனத்தின் குழுவினர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ‘தேங்க் யு’ கார்டு கொடுத்தனர்.

விமானத்தில் நல்ல முறையில் பிறந்த பெண் குழந்தையைப் பற்றிய செய்தி நாடு முழுதும் வைரலாகி வருகிறது. குழந்தையை பாதுகாப்பாக இந்த உலகுக்கு கொண்டு வந்த அந்த மருத்துவரையும், விமான குழுவினரையும் மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here