கொரோனா வைரஸ் திடீர் வேகம்… கைவிரிக்கும் உலக நாடுகள்.

-அதிர்ச்சியில் பொதுமக்கள்

டெல்லி:

உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 5,14,324 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகப் பிரேசில் நாட்டில் 90,830 பேருக்கும் அமெரிக்காவில் 59,770 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 38,501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல சிகிச்சை பலனிற்றி நேற்று மட்டும் 9,390 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகப் பிரேசில் நாட்டில் 2,736 பேரும் அமெரிக்காவில் 1,919 பேரும் இத்தாலியில் 431 பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை அமெரிக்காவில் 3.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசில் நாட்டில் 1.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் 2.09 கோடி பேர் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,912 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தற்போது தீவிரமாக உள்ள டாப் 10 நாடுகளில் 5 ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த இரண்டு நாடுகளும் டாப் 10 நாடுகளில் உள்ளன.

அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த அந்நாட்டு தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் பிரிட்டன் நாட்டைப் போல மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவது குறித்தும் பல நாடுகள் ஆலோசனை நடத்தியுள்ளன.

இருப்பினும், லாக்டவுன் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளும்கூட மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்றே தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here