நேரு உள் விளையாட்டரங்கில் முகாம்

 

2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை:

நேரு உள்விளையாட்டரங்கில் சென்னை மாநகராட்சி சார்பில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார்.

வீடுகளில் பணி செய்பவர்கள், காவலாளி, ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனருக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசி போடப்படும். மேலும் ஏப்ரல் இறுதிக்குள் 25-30 லட்சம் பேருக்கு தடுப்பூசி பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி, கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது.

இந்த முகாமைமாநகராட்சி ஆணையர்பிரகாஷ் துவக்கி வைத்தார். மேலும் இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.

இந்த முகாம் காைல 9 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையினை கொண்டு வர வேண்டும்.

 ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரம்மாண்ட முகாம் துவங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 45-59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆதார்கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதாவது ஒன்றைக்காட்டி இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here