பாகிஸ்தான் 1956- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி குடியரசு நாடானது. உலகின் முதன்முதலாக இஸ்லாமிய குடியரசானது பாகிஸ்தான் ஆகும்.
* 1919 – இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். * 1933 – ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது. * 1940 – முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது. * 1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். * 1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்தார். * 1965 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
* 1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது. * 1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு ராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது. * 1994 – சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர். * 1996 – தைவானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. * 2001 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.