மிகப்பெரிய விண்கல் பூமியை கடக்கிறது!

-இன்றையை இரவு வானில் அதிசயம்!

வானில் நடக்கும் மாற்றங்களை அவ்வபோது ஆராய்ந்து வரும் வானியல் நிபுணர்கள் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் .

அந்த வகையில் 2001 FO32 என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு அருகே வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள படேல் சிலையை போல இருமடங்கு தொலைவு அகலம் கொண்ட இந்த விண்கல் வேகமாக பூமியின் அருகே கடந்து செல்ல இருக்கிறது.

பூமியிலிருந்து 2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும் இந்த விண்கல்லானது மணிக்கு 1,23,876 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சாதாரணமான விண்கற்கள் பயணிக்கும் வேகத்தை விட மிக அதிகமாகும். 2 மில்லியன் தொலைவிற்கு அப்பால் பயணிக்கும் இந்த விண்கல்லை வெறும் கண்களால் காண முடியாது.மேலும் விண்வெளி மையங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என விஞ்ஞானிகள் கூறியிருப்பது பெரும் நிம்மதியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here