அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவைக்குத் தடை!

-இந்தியாவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி:

அனைத்துலக அளவில் விமான போக்குவரத்திற்கு ஏப்ரல் 30ம் தேதி வரை தடை விதித்து இந்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான போக்குவரத்து நடைபெறும் என அறிவித்துள்ளது.

தற்போதுள்ள கோவிட் -19 நிலைமை காரணமாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) திட்டமிடப்பட்ட அனைத்துலகப்  பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஏப்ரல் 30 வரை தடையை நீட்டித்துள்ளது.

இருப்பினும் இந்த கட்டுப்பாடுகள் உலக அளவில் நடைபெறும் சரக்கு விமான போக்குவரத் வழித்தடங்களுக்கு பொருந்தாது. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அனுமதித்த வழித்தடங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது

எனினும் உலக அளவில் “தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் நிலைமைக்கு தகுந்தாற்போல் விமானங்கள் இயங்க அனுமதிக்கப்படலாம்” என்று விமான போக்குரத்து ஆணையகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக மார்ச் 23 யான இன்றுடன் இதுவரை சர்வதேச பயணிகள் விமான சேவையை பலமுறை இந்தியா நிறுத்தியது. இடைநீக்கம் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சிறப்பு அனைத்துலக  விமானங்கள் கடந்த ஆண்டு மே முதல் 2020 ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் பறந்தன.

அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளில் இந்தியா விமான போக்குவரத்தை இயக்கி வருகிறது. தற்போது இந்தியாவில் விரைவாக கொரோனா பரவல் அதிகரித்து வருதன் காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்கள் சேவைக்கான தடையை ஏப்ரல் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸால் 795 பேர் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here