டெல்லியில் உறுதியாக நிற்கும் விவசாயிகள்.. போராட்டம் தொடரும்!

-வருட இறுதிவரை போனாலும் பரவாயில்லை..

டெல்லி:

எத்தனை நாட்கள் ஆனாலும் பிரச்சனையில்லை.. வருட இறுதிவரை போனாலும் பரவாயில்லை கண்டிப்பாக எங்கள் போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது.

100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறார்கள். சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

100 நாட்களை போராட்டம் கடந்துவிட்டாலும் இன்னும் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை. போராட்டத்தை கைவிடும் எண்ணம் விவசாயிகளுக்கோ, சட்டத்தை வாபஸ் வாங்கும் எண்ணம் அரசுக்கோ இல்லை.

இந்த நிலையில் நேற்று சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நினைவு நாளை டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் கொண்டாடினார்கள்.

பகத் சிங் தூக்கில் போடப்பட்டதை நினைவு கூர்ந்து இங்கு விவசாயிகள் பேசினார்கள். இந்த நிகழ்வில் பேசிய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகாய்த், எங்களின் போராட்டம் தொடரும்.

எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். விவசாயிகள் போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை .

அனைத்திற்கும் தயாராகவே வந்து இருக்கிறோம். சட்டத்தை அரசு வாபஸ் வாங்க வேண்டும். இதுதான் இப்போது எங்களின் ஒரே கோரிக்கை. அதுவரை போராட்டம் தொடரும்.

டிசம்பர், நவம்பர் வரை போராட்டம் சென்றாலும் பரவாயில்லை. கண்டிப்பாக எண்களின் கோரிக்கையை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை. இந்தியா முழுக்க போராட்டத்தை கொண்டு செல்லும் முடிவில் நாங்கள் இருக்கிறோம், என்று ராகேஷ் திகாய்த் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here