நடுவானில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயற்சி

–    பயணியால் நேர்ந்த பதற்ற

வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், நடுவானில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயற்சித்த பயணியால் பதற்றம் ஏற்பட்டது

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் அவசர காலத்தில் பயண்படுத்தும் கதவை அதாவது எமர்ஜென்சி எக்ஸிட் கதவை திறக்க முயற்சித்த பயணி கைது செய்யப்பட்டார்.

இன்று வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், நடுவானில் கவுரவ் என்ற ஒரு பயணி விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயற்சித்தார் என உத்தரபிரதேசம் வாரணாசி விமான நிலையத்தின் ஸ்பெஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இவரது செயலைப் பார்த்த, மற்ற பயணிகள் கூச்சலிட்டனர். விமானப் பணிப்பெண்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விமானத்தில் 89 பயணிகள் இருந்தனர்

விமானம் தரையிறங்கும் வரை அவரை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

விமானம் தரையிறங்கிய பின் அவர் வாரணாசி விமானநிலையத்திலுள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமானம் புறப்பட தொடங்கியதிலிருந்தே அவர் இருக்கையில் உட்காராமல் அங்கும் இங்கும் பதற்றத்துடன் திரிந்துகொண்டிருந்தார் என பயணிகள் தெரிவித்தனர். விமானம் நடுவானுக்கு சென்றதும் அவர் திடீரென எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்தார் என அவர்கள் கூறினர்

இந்த சம்பவம் வாரணாசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here