கொரோனாவிடம் இருந்து மனித குலத்தை விடுவிக்க வேண்டினேன்”..

 -பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை.!!

வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார்.

வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்ற நிலையில், அந்தப் பற்றின் காரணமாக வங்காளதேசத்தில்நேற்று நடந்த 50 – ஆவது சுதந்திர பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருட காலமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் எங்கும் செல்லவில்லை.எனவே கொரோனாவுக்கு பின்பு இவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக வங்காளதேச சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனி விமானத்தில் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கியுள்ளார். அங்கு பிரதமர் மோடி விமானத்தை விட்டு இறங்கும் போதே தயார் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அதற்குப் பின்பு 1971 ஆம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப் போரில் உயிரிழந்த தியாக வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்றுள்ளார். அதன்பின் இரண்டாவது நாளான சுற்றுப்பயணத்தின் இன்று நாட்டில் ஷீல்னா மாகாணம் சர்ஹுரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளியம்மன் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று சிறப்பு வழிபாடுகள் செய்துள்ளார்.

காளி கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் ,’இந்த சக்தி வாய்ந்த காளி அம்மனை வழிபட எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனால் பெரும் மன நிம்மதி அடைகிறேன். கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மனித குலத்தை விடுவிக்க வேண்டும் என்று காளி அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்’ என்று கூறினார்.

அதற்குப் பின்பு காளியம்மன் மேளா இங்கு நடைபெறும்போது இந்தியாவிலிருந்து இங்கு வந்து சிறப்பு விருத்திரனாக பங்கேற்கின்றேன் . இதனால் காளி பூஜை நிகழ்ச்சியின்போது இங்கு வருபவர்களுக்கு தங்க வசதியாக சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here