Home உலகம் இன்னும் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டாலும் பொங்கி எழுவோம்’

இன்னும் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டாலும் பொங்கி எழுவோம்’

-மியன்மார் ராணுவத்திற்கு எச்சரிக்கை

 ஷான் மாநில மீட்பு போராளி அமைப்பின் தலைவர் ஜெனரல் யோட் செர்க் மியன்மார் ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினரால் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர். 

மியன்மார் ஆயுதப் படைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் குறைந்தது 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் போக்கிற்கு மியன்மா

ரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் போராளி அமைப்புகள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இனி ஓர் ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழந்தாலும்கூட பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் மியன்மார் பாதுகாப்புப் படையினருக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஷான் மாநில மீட்புப் போராளி அமைப்பின் தலைவர் ஜெனரல் யோட் செர்க் சூளுரைத்துள்ளார்.

தாய்லாந்து எல்லை அருகில் இயங்கும் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என உறுதி அளித்துள்ளது. அதே போல பல போராளி அமைப்புகளும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

———————

ஆரோக்கிய நேரம்

உடல் எடையை குறைக்க டிராகன் பழம் உதவுகிறது. செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு , நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது டிராகன் பழத்தின் முக்கியமான பலனாகும்.

மேலும், உடலின் மிக பெரிய சொத்து வைட்டமின்-சி. இது டிராகன் பழத்தில் அதிகமாக இருக்கிறது.

வைட்டமின்-சியை தவிர வைட்டமின்-பி சத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இதிலிருக்கும் பி-1, பி-2, பி-3 சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here