எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கரமான தீ விபத்து

-வானளவு உயர்ந்த புகைமூட்டம்

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவு பகுதியில் , பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. நேற்று திடீரென்று சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது எண்ணெய்யை சேமித்து வைத்துள்ள டேங்க்களில் தீ பற்றிக்கொண்டு மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தை பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ,சுத்திகரிப்பு நிலையத்தில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினார்கள்.

தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை ,வானளவு உயர்ந்து ,அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் .

இந்த பயங்கர தீ விபத்தினால் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

மழையினால் ஏற்பட்ட இடி, மின்னல்களால் தீ விபத்து நடந்திருக்கலாம் என்று எண்ணை சுத்திகரிப்பு நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here