Home கல்வி புத்தகங்களை வாசிக்கத் தூண்டுவதன் மூலம் மொழி வளர்க்கும் நூலக வாரியம்

புத்தகங்களை வாசிக்கத் தூண்டுவதன் மூலம் மொழி வளர்க்கும் நூலக வாரியம்

தமி­ழில் வாசிப்­புப் பழக்­கம் என்­பது வகுப்­ப­றை­க­ளுக்கு அப்­பா­லும் தொடர்­வது ஒரு­வ­ரின் சிந்­தனை வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருப்­பது மட்­டு­மல்­லா­மல் தமிழ் மொழிப் புழக்­கத்­தை­யும் ஊக்­கு­விக்­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே தமிழ்ப் புத்­தக வாசிப்பை அதி­க­ரிக்­க­வும் ஊக்­கு­விக்­க­வும் தேசிய நூலக வாரி­யம் பல திட்­டங்­களைக் கொண்டுள்ளது.

ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 2,400 புதிய தமிழ்ப் புத்­த­கங்­க­ளை­யும் 1,000 புதிய தமிழ் மின்­புத்­த­கங்­க­ளை­யும் (eBooks) அறி­மு­கப்படுத்­து­வ­தோடு சிறி­ய­வர், பெரி­ய­வர் என்று அனை­வருக்­கும் பல வகை­யான வாசிப்பு நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்­து­ வ­ரு­கிறது.

“சென்ற ஆண்டு கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வல் அதி­கம் பாதித்த­போது ​​மின்­புத்­த­கங்­களை, மின் வளங்­களை மேம்­ப­டுத்துவ தில் எங்­க­ளது முயற்­சி­களை மையப்­படுத்­தி­னோம்.

மின்­னி­லக்­கச் சேவை ­களை அதி­க­ரிப்­ப­தன்­வழி வாச­கர்­கள் நூல­கங்­க­ளுக்குச் செல்­லாமல் வீட்டி­லி­ருந்­த­வாறே தொடர்ந்து புத்­த­கங்­களை வாசித்து மகிழ முடி­கிறது. கடந்த ஆண்டு மின்­புத்­தக வாசிப்புப் பழக்கம் 153% அதி­க­ரித்­தது.

“புதுப்­பிக்­கப்­பட்ட தேசிய நூலக வாரி­யத்­தின் கைபேசிச் செயலி, மின்­புத்­த­கங்­க­ளை­யும் மின் வளங்­க­ளை­யும் அணு­கு­வதை மிக­வும் எளி­மை­யாக்­கு­கிறது,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழி சேவைப் பிரிவின் தலைவரான திரு து.அழகிய பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here