வலிமை படத்தின் எப்போது ?

-கசிந்தது ரகசியம்

தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய ஹெச்.வினோத் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும், நடிகையாக ஹீமா குரோஷியும் நடித்து வருகின்றனர்.அதனால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் வரும் மே, ஜூன் மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here