பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து காலமானார்!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளர்,  பெரியாரின் பெரிய தொண்டரான வே.ஆனைமுத்து புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 96.

பெரம்பலூர் அருகே முருக்கன்குடி என்ற கிராமத்தில் 21-6-1925-ம் ஆண்டில் வேம்பாயி – பச்சையம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஆனைமுத்து. இவர் தனது 19 ஆம் வயதிலே பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அன்றுமுதல் பெரியாரின் கொள்கைகளை பரப்புவதே அவரின் வேலையாக அமைந்தது.

பெரியாரின் கொள்கைகளைப் மக்களிடையே பரப்ப, 1950-ம் ஆண்டில் “குறள் மலர்” என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன்பின் “குறள் முரசு”, “சிந்தனையாளன்” ஆகிய பத்திரிகைகளை தொடங்கினார். இதில் “சிந்தனையாளன்” பத்திரிகையை இன்றுவரை நடத்தி வருகிறார். மேலும், 1957-ம் ஆண்டில் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள் வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியாரின் சிந்தனைகள் குறித்து பல்வேறு நூல்களையும் இயக்கினார். மேலும், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கின்றார். 96 வயதாகும் வே.ஆனைமுத்து, இன்று புதுச்சேரியில் காலமானார். அவருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here