சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள் – வைரமுத்து
சென்னை:
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இறுதி ஒரு மணி நேரம் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6,28,69,955 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல அதிகாரம்
அதிகாரத்தைக் கொடுக்கும் அதிகாரம்.
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை
அதிகாரத்தைக் கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும்
வாக்களிக்கும் முன் சிந்திக்க மறக்காதீர்கள்
சிந்தித்த பின் வாக்களிக்க தவறாதீர்கள்
என்று வைரமுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.