உலகின் டாப் 10 செல்வந்தர்கள் யார்?

 -போபர்ஸ் பட்டியல் வெளியீடு!

போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் உலகின் டாப் 10 செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 35 ஆவது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் அமேசான் நிறுவர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

 

கடந்த ஆண்டு FORBES வெளியிட்ட பட்டியலில் மஸ்க் 31 ஆவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் 28 இடங்கள் முன்னேறி வந்துள்ளார் அவர். மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 150 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளார்.

அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் பில் கேட்ஸ், ஐந்தாவது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்கும் உள்ளனர். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் வாரன் பபெட், லாரி எலிசன், லாரி பேஜ், Sergey Brin , முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here