கொரோனா பாதிப்பு உயர்வால் தடுப்பூசி ஏற்றுமதி குறையும்’

இந்தியாவின் தாயளம்
வாஷிங்டன்: ‘
‘இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், உலக நாடுகளுக்கான தடுப்பூசி சப்ளை செய்வது குறையும்,” என, தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில், இதுவரை இல்லாத வகையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘காவி’ எனப்படும், தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பின் தலைமைச் செயல் தலைவர் சேத் பெர்க்லி கூறியதாவது:இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், உள்நாட்டில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, உலக நாடுகளுக்கு இந்தியாவின் தடுப்பூசி குறைவாகவே கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச், ஏப்ரல் மாதங்களில், ஒன்பது கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி கிடைக்கும் என, எதிர்பார்த்தோம்.
ஆனால் இதுவரை, மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது. அமெரிக்கா, ‘மாடர்னா, பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன்’ ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுடன், நோவாவேக்ஸ், ஆஸ்ட்ராஜெனகா ஆகியவற்றின் தடுப்பூசி மருந்துகளையும் பெற்று வருகிறது.
அதனால், அமெரிக்கா உள்ளிட்ட பிற வளமான நாடுகள், உலக நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்யும் என, நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா, பல நாடுகளுக்கு மொத்தம், 481 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி சப்ளை செய்துள்ளது. அதில், 73.59 லட்சம் டோஸ், இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here