உலக மகா புளுகு இதுதானோ!

-வியப்பில் ஆழ்ந்த WHO.!!!

வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என தொடர்ந்து கூறுவது உலக சுகாதார அமைப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி வாழ்ந்து வரும் வட கொரியா தங்கள் நாட்டின் கொரோனா பாதிப்பு இல்லை என தொடர்ந்து கூறிவருவது உலக சுகாதார அமைப்பை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 732 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த முடிவையும் வெளியிடவில்லை. இதனையடுத்து சீனாவை போன்ற இரும்புத்திரை நாடு பட்டியலில் இணைந்துள்ளது.

உலக மகா புளுகு இதுதானோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here