3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

எகிப்து நாட்டில் அகழ்வாராய்ச்சியின் மூலம் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான எகிப்தில் Luxor நகரத்துக்கு அருகே Kings பள்ளத்தாக்கில் மண்ணில் புதைந்திருந்த எகிப்தின் மிகப் பெரிய பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 3,400 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட Pharaohs மன்னர் Tutankhamun ஆட்சியின் கீழ் இருந்த பெருநகரம் என கூறப்படுகிறது.

அகழ்வாராச்சியில் அப்பகுதியில் ஏகப்பட்ட மனித, விலங்குகளின் எச்சங்கள், மண் பாண்டங்கள் , நகைகள், முத்திரைகள் பதித்த செங்கற்கள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காலத்தால் மண்ணில் புதைந்துபோன அந்த நகரத்தில் குடியிருப்புகள், சேமிப்பு கிடங்குகள், கடைகள், உணவகங்கள், அடுப்புகள், சுவர்கள், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட அக்கருவிகள் உள்ளிட்ட பலவற்றை அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாராய்ச்சியின் தகவல்கள் படங்களை முதல்முறையாக தற்போது ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here