நேபாளத்தில் 6 இந்திய சுற்றுலா பயணிகள் மாயம்; ஆபத்தான சூழல் குறித்து எச்சரித்த உள்ளூர் மக்கள்…

காத்மாண்டு, நேபாளத்தின் மிக ஆழமான ஏரியான ஷே-போக்சுண்டோவுக்குச் சென்ற, இரண்டு பெண்கள் உள்பட 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். பலத்த பனிப்பொழிவு காரணமாக அவர்கள் மலைப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எச்சரிக்கையை மீறிய பயணம்
நேபாளத்தின் டோல்போ புத்த கிராமப்புற நகராட்சி பகுதியில் இருந்து இந்த 6 பேரும் ஏரியை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியதாலும், மலைப்பாதை மிகவும் ஆபத்தானது என்பதாலும், பயணத்தை தொடர வேண்டாம் என உள்ளூர் மக்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த எச்சரிக்கையையும் மீறி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மேலே சென்றுள்ளனர்.

கணவாய்
அவர்கள் கடைசியாக ஷே-போக்சுண்டோ நகராட்சியின் நும்லா கணவாய் மற்றும் பாக்லா கணவாய் பகுதிகளுக்கு இடையே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோ பகுதியிலிருந்து போக்சுண்டோ ஏரியை நோக்கி, உயரமான மலைப்பகுதியிலிருந்து அவர்கள் கீழே இறங்கி திரும்பும்போது திடீரென ஏற்பட்ட பலத்த பனிப்பொழிவில் சிக்கி மாயமாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

தொடர்பு கொள்வதில் சிக்கல்
சுற்றுலா பயணிகள் மாயமான மலைப்பகுதியில் மொபைல் நெட்வொர்க் மற்றும் தொலைபேசி இணைப்பு வசதிகள் எதுவும் இல்லை. இதனால், காணாமல் போன இந்தியர்களை தொடர்பு கொள்வதில் மீட்புக் குழுவினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த விபரங்கள் தெரியாததால் பரபரப்பும், கவலையும் நீடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here