தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்!

நாளை முதல் 61 நாட்களுக்கு அமல்!

சென்னை:

மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் நாளை முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலாகிறது.

இந்த ஆண்டின் மீன்பிடித் தடைக்காலம் வருகிற 15-ஆம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதியில் 100-க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன் பிடிக்கச் சென்றுள்ளன. ஏராளமான விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

தடைக்காலம் நாளை தொடங்குவதால், ராமேசுவரம் பகுதியில் உள்ள மீனவர்கள் படகுகளில் இருந்து மீன் பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், கயிறு உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தாண்டின் மீன் பிடி தடைக்காலமானது இன்று இரவு (14-ஆம் தேதி) நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. இந்தத் தடை காலம் 61 நாட்கள் நீடிக்கும், அப்போது, மீனவர்களுக்கு மீன்பிடிக்க டோக்கன் வழங்கப் படமாட்டாது என மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கமெண்ட்: மிண்களின் இனப்பெருக்கம் மக்களின் வாழ்வாதாரம் . காத்திருந்தால் பயனாக இருக்கும். இந்த் இரு மாதங்களில் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கலாம். அப்படிச்செய்தால் மீனவர்கள் நலன் காக்கப்படுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here