அமெரிக்க இணை அரசு வழக்குரைஞா் பதவியில் இந்திய-அமெரிக்க பெண்

 செனட் சபையில் அங்கீகாரம்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடென் வெற்றிக்குபின் அமெரிக்க இந்தியர்கள் கை ஓங்கியிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

இந்தியர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் அந்நாட்டையும் மக்களையும் மதிக்கும் தன்மையுடையவர்கள் என்பது மட்டுமல்ல. நியாயத்திற்கும் தர்மத்திற்கும் முதன்மை தரவல்லவர்கள். 

நம்பிக்கையோடு செயல்படும்போது எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடிவர்கள் என்பதை ஜோ நன்கு உணர்ந்ததாலேயே அமெரிக்க  நாடாளுமன்றத்தில் அதிக வாய்ப்புகளை இந்தியர்களுக்கு வழங்கியிருக்கிறார். 

தேர்தலுக்கு முன்னும் அவர் கொடுத்த வாக்குறுதியை வெகு சிறப்பாகவே அவர் காப்பாற்றியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தாவை, இணை அரசு வழக்குரைஞா் பதவிக்கு நியமித்திருப்பது.

அவருடைய நியமனத்துக்கு அங்கீகாரம் பெறும் வகையில், செனட் சபையின் நீதிக் குழுவில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றதன் மூலம், அவருடைய நியமனம் செனட் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

செனட்  தலைவா் சுக் ஸ்கூமா் அவருடைய பெயரை செனட் சபை வாக்கெடுப்புக்கு அறிமுகம் செய்தாா்.

இதில் அவருடைய நியமனம் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்க நீதித் துறையில் சக்திவாய்ந்த மூன்றாவது நிலை அதிகாரியாக நியமிக்கப்படும் வெள்ளையா் அல்லாத முதல் பெண் என்ற பெருமையை வனிதா குப்தா (46) பெறுவாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here