எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கும் அரசாங்கத்திற்கு பிரெஸ்மா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தலைவர் டத்தோ அலிமாஜு தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக உணவகங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறையை நாங்கள் எதிர்நோக்கி வருகிறோம். அதிலும் கொரோனா காலகட்டத்தில் நாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மிக அதிகமானது.
இவ்வேளையில் எங்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு அரசாங்கம் உணவகத்துறை, துப்புரவு துறை, தோட்டத்துறை ஆகியவற்றிக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்கலாம் என்ற செய்தி எங்களுக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்திருக்கிறது.
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுடின், மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் ஆகியோருக்கு இவ்வேளையில் அலி மாஜு உணவகங்களின் உரிமையாளருமான டத்தோ அலி மாஜு நன்றி தெரிவித்துக் கொண்டார்.