அமெரிக்க நீதித் துறை முக்கிய பொறுப்பு

 அமெரிக்க இந்தியப் பெண்

வாஷிங்டன்:

புறந்தள்ளப்பட்டு நிறத்தை விமர்சனப்படுத்திய காலம் மாறி. இந்தியர்களின் ஆளுமை வெளிப்படும் கால இப்போது மேலோங்கியிருக்கிறது என்பதற்குச் சான்று கூறும் வண்ணம்  அமெரிக்காவின் துணை அட்டா்னி ஜெனரலாக, இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த நாட்டு நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியது.

இவாரோடு அரசு பொறுப்பில் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஆளுமைத்திறனே காரணம் என்றும் கருதப்படுகிறது, மேலும் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் வெற்றிக்கு இதியர்களின் பிரதிபலிப்பு அதிகமாக இருந்ததும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு பெற்றதும் ஒரு சாதனையாகக் கருத்தப்படுகிறது  

அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரிய பதவியான அது, வெள்ளையரல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதுதொடா்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சோந்த உறுப்பினா் லிசா மா்கோவ்ஸ்கி, தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வனிதா குப்தாவை ஆதரித்து வாக்களித்ததால் அவரது நியமனத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

46 வயதாகும் வனிதா குப்தா, மனித உரிமை வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here