–முதலாளிகள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்!
புத்ராஜெயா–
இன்றைய காலகட்டத்தில் தொழில்துறைகளில் சுகாதாரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஹாஜி அவாங் ஹஷிம் நினைவுறுத்தினார்.
முன்னதாக உலகப் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார தினத்தை முன்னிட்டு புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சில் மெய்நிகர் முறையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை அமைச்சர் உரையாற்றினார்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பாதுகாப்பான முதலீட்டு உற்பத்திகள், தொழில் சார்ந்த தயாரிப்புகளின் பங்களிப்பு மிக அவசியம்.
இச்சுழ்நிலையில் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் தங்குமிடம், சுகாதாரம் ஆகிய அம்சங்களில் அக்கறை கொள்ள வேண்டும்.
தறபோது நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலைத் தடுக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்கு மனிதவள அமைச்சு, அது சார்ந்த பாதுகாப்பு – சுகாதார அமைப்புகள் தங்களின் பங்களிப்பை முழுவதுமாக வழங்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பணி இடங்களில் ஏற்படும் விபத்துகளாலும் நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
–எம். அன்பா