முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களா நீங்கள்!

முகக்கவசம் அணிய வேண்டாம்!

முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா: 

அமெரிக்க மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் இதுவரையில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். இதனை நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.


இதன் தொடர்ச்சியாக அந்த மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நண்பர்களுடன், வெளிப்புற உணவு விடுதியில் ஒன்றாக உணவருந்தும் பொழுதும், முக கவசம் அணியாமல் இருப்பது முழு அளவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதுகாப்புமிக்க ஒன்று என்றே எடுத்து கொள்ளலாம் என அந்த மையம் தெரிவித்து உள்ளது.


இந்த புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடுகளால் முகக்கவசம் அணியாமல் அமெரிக்க மக்கள் வெளியே செல்ல கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here