உடலில் ஒட்டு துணி இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஆடவர்

கூலிம்: மோட்டார் சைக்கிளில் ஆடையின்றி பயணித்த ஒருவர் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற அவ்பாடவர் போதையில் இருந்ததாக நம்பப்பட்டது.

பின்னர் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகிவிட்ட 24 விநாடி வீடியோவில், அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை உலகில் எந்தவித அக்கறையுமின்றி சவாரி செய்தார். யாராவது அவரைப் பார்க்கிறார்களா என்று கூட அவர் கவனிக்கவில்லை.

கூலிம் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசார் ஹாஷிமை தொடர்பு கொண்டபோது இந்த சம்பவம் குறித்து யாரும் போலீஸ் புகாரினை பதிவு செய்யவில்லை என்றார்.

அவர் ஆடை அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அந்த நபர் பெரும்பாலும் குடிபோதையில் இருப்பார் என்று அவர் நம்ப்படுகிறது. இருப்பினும், எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் கிடைக்கவில்லை என்பதால் அவரை கைது செய்யவில்லை என்று ஹரியன் மெட்ரோ இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here