முதல்வராகிறார் ஸ்டாலின் ; தலைவர்கள் வாழ்த்து

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் தமிழகம் கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் மொத்தம்  3998 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 70% அதிகமான வாக்குகள் பதிவாகின.

மேலும் தமிழக அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் நடைபெற்ற இந்த தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகிய 5 முதல்வர் வேட்பாளர்கள்  போட்டியிட்டனர்.

இந்திய நேரப்படி இரவு 9.05 மணியளவில் திமுக 168 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்று அடுத்த தமிழ்நாடு முதல்வராக வந்திருக்கிறார். அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அதிமுக தலைவமையில், பாஜக, பாமக, தமக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணயிலும், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்தித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here