நமக்கு நாமே உத்தரவாதம்

-இதில் வேண்டாம் பிடிவாதம்

போர்ட்டிக்ங்ன்-
மலேசியாவில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன் கோரத்தாண்டவம் கல்வித் துறைகளை மிகக் கடுமையாகப் பாதித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. அதேசமயத்தில் மரண எண்ணிக்கையும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மருத்துவமனைகளின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .

மே மாதம் கொரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்திருப்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்படும். மேலும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது இக்கொடிய நோய்க் கிருமித் தொற்றை எதிர்கொள்வதில் நாட்டு மக்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயமும் அவசியம்.

கொரோனாவின் மூன்றாம் அலை படுபயங்கரமாக இருக்கிறது. இந்தியாவில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். தகனம் ஙெ்ய்வதற்குக்கூட போதுமான இடம் இன்றி வரிசயைில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் காட்சியைக் காணும்போது இதயம் நின்று விடுவதுபோல் இருக்கிறது. மரணத்தின் வலியை உயிரோடு இருக்கும் போதே உணர்கிறோம்.

இறைவன் அருளாலும் அரசாங்கத்தின் கட்டுக்கோப்பான நடவடிக்கைகளாலும் முன்களப் பணியாளர்களின் தியாகங்களாலும் அயராத உழைப்பாலும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் உயர் ஒழுக்க நெறிமுறைகளுடன் கூடிய வாழ்க்கை முறையாலும் நாட்டில் அத்தகைய கொடுமை பெரிய அளவில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டமும் ஓரளவு இந்நோய்த் தாக்கத்தின் கொடூரத்தைத் தணிய வைத்திருக்கிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குப் பதிந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கை மனநிறைவு தரும் அளவில் இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

மக்களின் அலட்சியம் , ஒத்துழையாமை போன்றவை கொரோனாவுக்கு எதிரான போரைத் தோற்கடித்துவிடும் என்பதை பொதுமக்கள் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும் 

மேலும் கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைச்சு விதித்திருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளை வீட்டில் இருந்தாலும் சரி, வெளியிடங்களிலும் இருந்தாலும் சரி, அவசியமாகவும் கண்டிப்பாகவும் பின்பற்ற வேண்டும். இவை நம்முடைய வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.

அவசியம் இல்லாமல் கூட்டம் கூடுவதையும் வெளியிடங்களுக்குச் செல்வதையும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும். நம் உயிருக்கு நாமே உத்தரவாதம் என்பதை மக்கள் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் புரிந்து தெளிவுபெற வேண்டும் என்று சாய் சேகர் நினைவுறுத்துகிறார்..

 

-க. கலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here