20 ஆண்டுகளுக்கு பின் மலர்ந்தது

-தமிழகத்தில்  தாமரை!

சென்னை :
தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது; பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 20 இடங்களில் போட்டியிட்டது. அதில், நாகர்கோவில் தொகுதியில், எம்.ஆர்.காந்தி; கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here