எஸ்பிபியில் அரசியல் தலையீடு குறித்து எம்ஏசிசி ஆராயாது

கோலாலம்பூர்: போலீஸ் படை ஆணையத்தில் (எஸ்.பி.பி) அரசியல் தலையீடு இருப்பதைக் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) ஆராயாது என்று அதன் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இது ஒரு உள் போலீஸ் பிரச்சினை என்று நான் உணர்கிறேன். காவல்துறையினர் அதைத் தீர்த்துக் கொள்ளட்டும், நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று இன்று (மே 4) தெரிவித்தார்.

ஏப்ரல் 30 ஆம் தேதி, முன்னாள் போலீஸ் படைத்தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர் எஸ்.பி.பி. மற்றும் போலீஸ் படையின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறினார்.

கட்சிகள் தாவல் அரசியல்வாதிகள் பற்றி அப்துல் ஹமீட் கூறிய பிற கூற்றுக்கள் குறித்து  கேட்டதற்கு, கட்சி தாவலுக்கு எதிராக எந்த சட்டமும் இல்லை என்று அசாம் கூறினார். கட்சிகளை மாற்ற விரும்பும் எவரும் அவ்வாறு செய்யத் தடை விதிக்க எந்தவொரு  எதிர்ப்பு சட்டங்களும் இல்லாததால் அவ்வாறு சுலபமாக செய்ய முடியும் என்றார்.

இதுபோன்று, இந்த விஷயத்தில் நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

பி.கே.ஆரின் செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நட்ரா இஸ்மாயிலின் சமீபத்திய கூற்றுக்களை அவர் மேற்கோள் காட்டி, கட்சிகளை மாற்றுவதற்கு 10 மில்லியன் வழங்கப்பட்டதாக கூறப்படும் கூற்றுக்கள் தொடர்பாக எம்.ஏ.சி.சி விசாரணைகளை மேற்கொண்டது.  அதில் வழக்கு இல்லை என்று முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

MACC விசாரணைகள் வழக்கமாக ஒரு வேட்பாளரால் வாக்குகளை வாங்குவது போன்ற தேர்தல் சட்டம் தொடர்பான ஊழல்களைச் சுற்றி வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 18 அன்று, நட்ரா கட்சி தாவலுக்கு தூண்டப்பட்டதாகக் கூறி ஒரு அறிக்கையை பதிவு செய்த பின்னர், எம்.ஏ.சி.சி விசாரணைகளைத் தொடங்கியதை அசாம் உறுதிப்படுத்தினார்.

MACC விசாரணை ஆவணங்கள் துணை அரசு வக்கீல்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், எந்தவொரு குற்றச் செயலும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here