திருமண வாழ்வில் தொடர விருப்பமில்லை

 –பில்கேட்ஸ் தம்பதியரின்   மைக்ரோ சாஃப்ட்       அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார்.

அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸ் அவர்களும், பில்கேட்ஸ் ஆகிய இருவரும் சந்ததி கொண்டனர். அதன் பின் 1994 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பின் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் அவர்களது பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றை துவங்கினார். இந்த தொண்டு நிறுவனம் மூலமாக உலகெங்கிலுமுள்ள பலருக்கு இருவரும் இணைந்து உதவி செய்து வருகின்றனர்.

தற்பொழுதும் மெலிண்டா கேட்ஸ் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளை மூலமாக பலருக்கு சேவைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், 27 வருட வாழ்விற்குப் பின்பதாக தற்பொழுது பில்கேட்ஸ்,  மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பில்கேட்ஸ் தம்பதியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் தாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்து உள்ளதாகவும், உலகம் முழுவதிலும் பரந்து செயல்படக்கூடிய அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதன் மூலம் பலருக்கு சுகாதாரமாக வாழ்வதற்கான வழிகள் செய்து தரப்பட்டுள்ளது ஆகவும் தெரிவித்துள்ளதுனர்.

தற்பொழுதும் இந்த பணியில் தாங்கள் இணைந்து தொடர போவதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், வாழ்வின் அடுத்த கட்டத்தில் தாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தம்பதியாக வாழ்வது தங்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

முதிர்ந்த தம்பதிகளாக இருவரும் இணைந்து தற்பொழுது தங்கள் விவாகரத்து முடிவை வெளியிட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here