இந்தியர்களின் அவதி வேடிக்கை அல்ல!

ஈமக்கிரியை செய்ய 

இடமில்லையா ?   இடம் கொடுக்க மனமில்லையோ?

மலாக்கா இந்தியர்களின் நீண்ட கால எதிர் பார்ப்பாக இருக்கும்  கர்மக்காரியம் செய்வதற்கான இடத்தை வழங்குவதில் மலாக்கா மாநில அரசு மெத்தனம் காட்டி வருவது இந்தியர்களின் மனதில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச .சுப்பிரமணியம் கூறினார்.

ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்து , வாழ்ந்து ,வாழ்கையின் மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள அவரது முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்ய கூடிய இந்துச் சமயத்தின் சடங்குகளில் முக்கியமானதாகும். 

இந்த நில ஒதுகீட்டில் நிலவி வரும் இழுபறி இந்தியர்களின் மனதை வெகுவாக பாதித்து உள்ளதை மாநில அரசு உணர வேண்டும் என ஆயேர்குரோ ,கோத்தா செமர்லாங் மியாஸ் கல்வி கழக அலுவலத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அவர் கருத்துரைத்தார்.

இக்கிரியை முறையாக நிம்மதியாக ,சுதந்திரமாக செய்வதற்கான இடத்தை இது நாள் வரை நமக்கு கிடைக்கவில்லை. தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மலாக்கா கடற்கரையோரத்தில் உள்ள நிலத்தை இடத்தை அடையாளம் காண்பதற்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடற்கரையோரப் பகுதிகளில் மண் தூர் வாரும் மேம்பாட்டு பணிகளினால் மஸ்ஜிட் தானா பகுதியில் உள்ள தெலோக் கோங் எனும் இடத்தை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பிறகு பக்காதான் ஹரப்பான் ஆட்சியின் போது அதே இடம் அடையாளம் காணப்பட்டு அதனை ஒதுக்கி தருவதற்கும் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டது.

மீண்டும் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் ஒதுக்கப்பட்ட அவ்விடத்தை தொடர்ந்து நிலைநாட்டி அதிகாரப்பூர்வமாக இந்தியர்களுக்கு கொடுக்க மனமில்லாமல் நடப்பு மாநில அரசு தட்டிக் கழித்து வருகின்றது.

ஈமக்காரியம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நில விவகாரம் தொடர்பில் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த தனிக்குழு மலாக்கா, ஸ்ரீ கிருஷ்ண பலராம் ஆலயத் தலைவர் சமுதாய நெஞ்சர் கோபி அச்சுதன் தலைமையில் அமைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் மாநில முதலமைச்சருடன் நானும் பணிக்குழுவினரும் மேற்கொண்ட சந்திப்பில் அனைத்தும் முழுமையாக விளக்கமளிக்கப்பட்டது.

விரைவில் நல்லதொரு பதில் கிடைக்கும் என முதலமைச்சரிடமிருந்து வாக்குறுதியும் வழங்கப்பட்டது. தற்பொழுது நான்கு மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அனுப்பிய பல கடிதங்களுக்கும் தொலைபேசி அழைப்பிற்கும் இது நாள்வரை முதலமைச்சர் தரப்பிலிருந்து எந்தவொரு பதில் கடிதமும் வரவில்லை,

இந்தியர்களின் அடிப்படை தேவைகளில் பிரதனமாக விளங்க கூடிய ஈமக்காரியம் செய்யும் இட விவகாரத்தை மாநில அரசு மெத்தின போக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது . இது கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினையாகும்.

இந்தியர்கள் மத்தியில் இவை பெரும் துன்பத்தையும் அதிருப்தி அலையையும் ஏற்படுத்தி உள்ளது என்பதனை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த ஆதங்கதிற்கான விடியல் விரைவில் ஏற்படாவிடில் அரசியல் பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும் என டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

மலாக்காவில் உள்ள 24 அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த தசுமார் 30 பேர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

கோபி அச்சுதன் , டத்தோ டாக்டர் சுவாமி நாதன், டாக்டர் நாச்சியப்பன் , டத்தோ ஆர் ராகவன், டத்தோ ஆர்.பெருமாள், டத்தோ டாக்டர், டத்தோ பன்னீர்ச்செல்வம், அரசு சாரா இயக்கத் தலைவர்களுடன் பல முன்னாள் அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here