அன்னையரைப் போற்றின் ஆயுள் வளமாகும்

அன்றாடம் ஆசி பெறுக !

அதுவே  அருமருந்தாகும்!

உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் அனைத்துத் தாய்மார்களுக்கும் மகளிருக்கும்  இனிய நல்வாழ்த்துகள்.

தாய்மை என்பது தவம். இறைவனின் படைப்பிலேயே மிகச் சிறந்த அம்சமாக தாய்மை போற்றப்படுகிறது.

மனித குலத்தில் மட்டுமன்றி விலங்குகளிடத்திலும்  தாய்மையின் உணர்வும் பாசமும் இயல்பாகவே நிறைந்து கிடக்கிறது

பிறந்ததும் காணும் முதல் கடவுள்  தாய்தான் அந்தக்கணம் முதலே  அவள்தான் அனைத்தும் என்றாகி விடுகிறாள். அந்த நொடியே இறைவன் தன்பொறுப்பை அன்னையிடம் பகிர்ந்துகொள்கிறான்.

 இரவு பகல் பாராமல் கண்விழித்து பாலூட்டி நம்மைப் பாதுகாக்கிறார். வளர்க்கிறார். உணவு அளிக்கிறார். பள்ளிக்குச் செல்வதையும் கல்வி கற்பதையும் உறுதி செய்கிறாள்.

நல்ல பண்புகளை, பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருகிறார் அன்னை. அப்பொழுதே குழந்தையும் அன்னையும் இருவிழிகளாகிவிடுகின்றனர். 

நமது வாழ்க்கையில் தந்தைக்கும் முக்கிய இடம் உண்டு என்றாலும் அது ஒரு தாய்க்கு சமமான அடுத்த நிலையாகும். தந்தையர்கள் இதை  மறுப்பதில்லை.அதைத்தான் அவர்களும் விருப்புகிறார்கள். 

அகநானூறு போல் அகம் அன்னை என்றால் புறம் தந்தை என்றாகிவிடுவதைப்போல என்றும் கூறலாம்.

இவ்வாறு நமக்கு அன்பும் நல்ல பண்புகளும் சொல்லித் தந்து வளர்க்கும் அன்னையரை அவர்களின் இறுதிக் காலம்வரை போற்றுகின்ற தர்மத்தைதான்  நம் மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். 

அப்படிச்செய்வதே தர்மம். இதைக்கடைப்பிடித்து ஒழுகி வருகின்றவர்களுக்கு இறைவனின் பார்வை எப்போதும் கிட்டும். அருள் கொட்டும்.

இந்தியப் பாரம்பரியத்தில் தாய்மைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் பெருமைகளும் ஏராளம். அன்னையின்  ஆசியால்தான் தாங்கள் வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்தோம் என்பது வார்த்தயல்ல, மெய்வாக்கு. 

நமது இலக்கியங்களும் புராணங்களும் கூட தாய்மை குறித்த ஏராளமான கருத்துகளையும் கதைகளையும் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அன்னையின் நல்லாசி ஒன்றே போதும் நமது வாழ்க்கையும் செழிப்பாக உயரும்.

அனைத்து தாய்மார்களுக்கும்,  அன்னையர் தின நல்வாழ்த்துகள். 

அன்பே சிவம். அன்னையே தவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here