மாடுகளைக் களவாடும் எருமைகள்

படகில் இழுத்துச் சென்ற களவானிகள்

கோத்தா பாரு-
ரந்தாவ் பாஞ்சாங் அருகே கோலோக் ஆற்றில் ஒரு படகைப் பயன்படுத்தி ஒரு கும்பல் 13 மாடுகளைக் கட்டி இழுத்து வந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட அந்த மாடுகளின் மதிப்பு 91ஆயிரம் வெள்ளியாகும்.
நேற்று முன் தினம் காலை 10.30 மணியளவில் அந்த கும்பலின் நடவடிக்கை தெரிய வந்ததிலிருந்து பொது தற்காப்புப் படை சுப்ரிண்டெண்டன்ட் ஹசரி நூசி தெரிவித்தார்.

சில நபர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து மலேசியாவுக்குள் கோலோக் ஆற்றில் ஒரு படகைப் பயன்படுத்தி மாடுகளைக் கட்டி இழுந்து வந்தது தெரியவந்தது.

அந்தக் கும்பலை அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்றபோது, அவர்கள் ஒரு வனப் பகுதிக்குள் அந்த மாடுகளை மறைத்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் அங்கு இருப்பதைக் கண்டதும் அந்தக் கும்பல் மாடுகளை அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க ஓடியது.

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் காட்டுக்குள் ஓடி மறைந்தனர்.

சுமார் 13 மாடுகள் மீட்கப்பட்டன. ரமலான் மாதத்தில் மாட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்திருப்பதால் இந்தக் கும்பல் மாடுகளை கடத்தியது தெரியவருகிறது.

மாடுகளின் உரிமையாளர்களின்   வயிற்றெரிச்சல்  சும்மா விடுமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here