ஒட்டுமொத்த பள்ளிகளையும் மூடவேண்டாம்

 

நம்பிக்கை கூட்டணி ஆலோசனை!

கோலாலம்பூர்-
ஒட்டுமொத்தமாக பள்ளிக்கூடங்களைக் கல்வி அமைச்சு மூடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அதற்குப் பதிலாக கோவிட்-19 வர்ணக் குறியீடுகளைப் பயன்படுத்தி கல்வித் தவணைகளில் இடையூறுவதை ஏற்படுவதையும் குழப்பங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் நம்பிக்கைக் கூட்டணி நேற்று வலியுறுத்தியது.

கோவிட்-19 பரவிய மண்டலங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள உட்புறமான பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களையும் அல்லது பச்சை மண்டலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களையும் மூடுவது அர்த்தமற்றது என்று அது சுட்டிக்காட்டியது.

புறநகர்ப் பகுதிகளில் தொலைத் தொடர்பு பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இணைத்யதள வசதியும் அங்கு குறைவாகவே உள்ளது. ஆகவே கோவிட் -19 சிவப்பு அல்லது மஞ்சள் மண்டலங்களுடன் ஒப்பிடுகையில் பச்சைமண்டலங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து இயங்குவது பாதுகாப்பானதே என்று நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்தது.

தொற்றுப் பரவல் ஆபத்து உள்ள பகுதிகளை அடையாளம் காணும் அரசாங்கத்தின் நடவடிக்கை மூலம் தொற்றுப் பரவல் இல்லாத பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களைக் கண்டுபிடிக்கலாம் என்றும் அதன் அறிக்கை கூறியது.

கல்வி முன்னாள் அமைச்சர் மஸ்லீ மாலிக், கல்வித் துணை அமைச்சர் தியோ நி சின், கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த நிக் நஸ்மி நிக் அகமட், அமானா கட்சியைச் சேர்ந்த ஹசான் பஹாரும் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடங்களின் போதனை இரண்டு வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கல்வி அமைச்சர் டத்தோ ரட்ஸி ஜிடின் அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here