இரு கும்பல்களுக்கிடையே மோதல் – ஒருவர் பலி; இருவர் படுகாயம்

ஈப்போ: தெலுக் இந்தான் அருகிலுள்ள லாங்காப் என்ற இடத்தில் ஒரு கட்டுமானத் தளத்திற்கு அருகே 29 வயது  ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த வியாழக்கிழமை (மே 13) இரவு 9 மணியளவில் தாமான் தேசா மாஜு பேராக் என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையில் பாதிக்கப்பட்டவர், கம்பாரைச் சேர்ந்த வேலையற்ற நபர் மற்றும் மூன்று நண்பர்கள் உரையாடி கொண்டிருந்ததாக ஹிலீர் பேராக் ஒ.சி.பி.டி உதவி  ஆணையர் அஹ்மட் அட்னான் பாஸ்ரி தெரிவித்தார்.

அப்பகுதியில் புதரின்  அருகே வெட்டு காயங்களுடன் ஒரு உடல் காணப்படுவது குறித்து பொதுமக்களிடமிருந்து  போலீசாருக்கு அழைப்பு வந்தது என்றார்.

போலீசார் வந்தபோது, ​​உடலைக் கண்டறிந்தனர், வலது கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்று அவர் கூறினார்.

வீடமைப்பு கட்டுமான இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளின் வரிசையில் சண்டை நடந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக ஏசிபி அஹ்மட் அட்னான் தெரிவித்தார்.

இரண்டு வாகனங்களில் எட்டு பேர் வந்து பாதிக்கப்பட்ட மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கத் தொடங்கியபோது பாதிக்கப்பட்டவர் மூன்று நண்பர்களுடன் குடித்துக்கொண்டிருந்தார். பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அக்கும்பல் அவர்களுக்கு தூரத்தி கொண்டு ஓடினர்.

இந்த குழப்பத்தில் 25 மற்றும் 19 வயதுடைய இரண்டு நண்பர்கள் காயமடைந்ததாக அவர் கூறினார். அவர்களில் ஒருவருக்கு அவரது மூன்று விரல்களில் காயம் ஏற்பட்டது, மற்றொருவர் கையில் வெட்டப்பட்டார் என்று அவர் கூறினார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்தவர்  கட்டுமான இடத்தில் புதருக்குள் ஓடினார் என்று ஏசிபி அஹ்மட் அட்னன் கூறினார். எட்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக போலீசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

வழக்கு தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள் ஏஎஸ்பி ஹம்சானியை 05-629 9222 என்ற எண்ணில் அழைக்கலாம். இந்தக் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here