–ஆஸ்திரேலியா டார்வின் சென்றது
இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது.
இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர்.
எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார்.
இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது.
இந்த விமானம் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.